என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பியுஷ் கோயல்"
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
- பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார்.
இதன் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனித வளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டினை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டன.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள். 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இம்முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்று உள்ளன. குறிப்பாக, மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாது காப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை தவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டன.
இம்மாநாட்டின் முக்கிய முதலீட்டாளர்களான டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் நிறுவனம் (37,538 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), வின்பாஸ்ட் நிறுவனம் (16,000 கோடி ரூபாய்), டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (12,082 கோடி ரூபாய்). ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் (12,000 கோடி ரூபாய்), ஹுண்டாய் நிறுவனம் (6.180 கோடி ரூபாய்), டி.வி.எஸ்.நிறுவனம் (5,000 கோடி ரூபாய்), பெகட்ரான் நிறுவனம் (1,000 கோடி ரூபாய்) மற்றும் செயிண்ட் கோபைன் (3,400 கோடி ரூபாய்) போன்ற குறிப்பிடத்தக்க நிறு வனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அடங்கும்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 6277.27 கோடி ரூபாய் முதலீட்டிலான பர்ஸ்ட் சோலார், குவால்கம் மற்றும் பெங் டே ஆகிய 3 நிறுவனங்களின் திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்வதுடன் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார் என்றார் .
இதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
கோவை:
மத்திய மந்திரி பியூஸ் கோயல் கோவையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரிடம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்து உள்ளார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பியூஸ் கோயல் கூறியதாவது:-
இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த உதவிகளை காங்கிரஸ் பறித்து விட்டு ரூ.72 ஆயிரம் வழங்குமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். மக்கள் ஒருபோதும் மானியம் வழங்குவதை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கப் பார்க்கிறது. இது இந்திய மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது:-
மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எந்த அளவுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். எளிமையான தலைவனால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிலைமையை உணர முடியும். பிரதமர் மோடி மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால், தாய்மார்களின் கண்ணியத்தை காக்க கழிவறை கட்டும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார். எல்லா வீடுகளுக்கும் மின்சாரம், ஆரோக்கியமான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமானால் தமிழக வளர்ச்சி இரு மடங்காக உயரும் என்பதில் ஐயமில்லை.
தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படக் கூடிய வலிமையான திறமையான தலைவர் தேவை. எதிரி நாட்டின் எல்லையை கடந்து தாக்கி பயங்கரவாதத்திற்கே பதிலடி கொடுத்த ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான். வேகமாக, வளமான, பொருளாதார வளம் பெற்ற நாடாக இந்த நாடு வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பிரதமர் மோடியின் கரத்தை நாம் வலிமையாக்க வேண்டும்.
அதற்கான மெகா கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவுவதோடு, நாம் நாற்பதும் நாமதே என வெற்றி வாகை சூட வேண்டும். இந்தியா சூப்பர் பவராக மாற மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #PiyushGoyal #congress #bjp
ரயில்வே மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை மந்திரி பியுஷ் கோயல் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தேசியவாத நலன்களையும் தேசிய பாதுகாப்பையும் முக்கியமாக வைத்திருப்பதில் ஒரு தெளிவான நிலை எடுத்துள்ளோம். மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதை விரைவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்தது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட, எல்லா வகையிலும் சிறந்த முறையில் ரபேல் ஒப்பந்தத்தை பாஜக அரசு செய்ததுள்ளது.
ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்தது டசால்ட் நிறுவனம்தான் என்பதை அதன் சிஇஓ எரிக் டிராப்பியர் தெளிவாக உறுதிப்படுத்தி உள்ளார்.
ஆனால் ராகுல்காந்தியோ பிரான்ஸ் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை திரிப்பதாகவும், தொடர்ந்து பொய்களை கூறுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். ஒரே பொய்யை நூறு முறை திரும்பக் கூறினாலும் அது உண்மையாகி விடாது . பிரஞ்சு செய்தி ஊடக அறிக்கையை முடுக்கிவிட்டு, முன்னாள் பிரதம மந்திரி ஒரு திருடன் என்று பொய் சொல்கிறார். ராகுல் காந்தி தொடர்ச்சியாக ரபேல் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக பொய் சொல்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஒரு சிக்கல் நிறைந்த கட்சி, அவர்களின் தலைமையால் அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள முடியவில்லை மற்றும் அவர்களது சொந்த தவறுகளை மறைக்க முயற்சி செய்கிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பிற்காக உணர்திறன் கொண்டிருக்கும் ரபேலின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி விவாதிக்க உச்ச நீதிமன்றம் கூட மறுத்து விட்டது என கூறி உள்ளார். #PiyushGoyal #RahulGandhi
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியுஷ் கோயல், ‘பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். #GST #SanitaryNapkinsExempted
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்